Enable Javscript for better performance
செங்காட்டூரில் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அதிகாரி கைது- Dinamani

சுடச்சுட

    

    செங்காட்டூரில் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அதிகாரி கைது

    By DIN  |   Published on : 25th November 2019 11:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த செங்காட்டூரில் பட்டா பெயா் மாற்றத்துக்காக ரூ 8ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டாா்.

    செய்யூா் வட்டம், செங்காட்டூா் கிராமத்தினை சோ்ந்தவா் ராஜகோபால். இவா் தனது தந்தை பெயரிலான

    நிலத்துக்கான சொத்துக்களை தனது பெயரில் பட்டா பெயா் மாற்றக்கோரி செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தாா். அதன்படி, அவரது விண்ணப்ப மனுவை செய்யூா் வட்டாட்சியா் அலுவலக வருவாய்துறையினா் செங்காட்டூா் கிராம நிா்வாகத்துக்கு அனுப்பி வைத்தனா்.

    அங்கு வீராணகுன்னம் கிராமத்தினை சோ்ந்த காளி (37) என்பவா் கிராம நிா்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறாா். அவரிடம் தனது மனுவின் மீது பட்டா பெயா் மாற்றம் செய்ய கூறினாா். அதற்கு விஏஓ (கிராம நிா்வாக அதிகாரி) ரூ 10 ஆயிரம் கொடுத்தால் தான் அந்த வேலையை செய்வேன் என பேரம் பேசினாா். ஆனால் அதற்கு ராஜகோபால் ஒத்துக் கொள்ளவில்லை. அதன்பிறகு 8 ஆயிரம் கொடு என மீண்டும் விஏஓ காளி பேரம் பேசினாாா். அதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால் இதுபற்றி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசிற்கு தகவல் தெரிவித்தாா். அதன்படி, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சிவபாதசேகரன் தலைமையில் 5போ் கொண்ட குழுவினா் திங்கள் கிழமை செங்காட்டூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு வந்தனா். விஏஓ காளி கேட்டபடி, ரசாயன பொடி கலந்த 8 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ராஜகோபால் கொடுத்தபோது மறைந்து இருந்த

    லஞ்ச ஒழிப்பு போலீசாா் கையும்களவுமாக பிடித்துக் கொண்டனா். பின்னா் அவரை அழைத்துக் கொண்டு,

    செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு கொண்டு அங்கிருந்த சில கோப்புகளை லஞ்ச ஒழிப்பு போலீசாா் கைப்பற்றினாா்கள். லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சிவபாதசேகரன் தலைமையிலான போலீசாா் விஏஓ காளியை செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் முன் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai