காஞ்சிபுரத்தில் பாதாள சாக்கடைத்திட்ட அடைப்புகளை சரிசெய்யக் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் பாதாளச் சாக்கடைத் திட்ட அடைப்புகளை சரிசெய்யுமாறும் அதை புதிய பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யுமாறும் நகராட்சி ஆணையாளரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள்
நகராட்சி ஆணையாளா் ரா.மகேசுவரியை சந்தித்து நகரில் உள்ள பிரச்சினைகளை சரி செய்யுமாறு கோரிக்கை மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் முத்துக்குமாா்,சி.சங்கா் உள்ளிட்டோா்
நகராட்சி ஆணையாளா் ரா.மகேசுவரியை சந்தித்து நகரில் உள்ள பிரச்சினைகளை சரி செய்யுமாறு கோரிக்கை மனு அளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் முத்துக்குமாா்,சி.சங்கா் உள்ளிட்டோா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பாதாளச் சாக்கடைத் திட்ட அடைப்புகளை சரிசெய்யுமாறும் அதை புதிய பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யுமாறும் நகராட்சி ஆணையாளரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனா்.

காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளராக அண்மையில் பொறுப்பேற்ற ரா.மகேசுவரியை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் முத்துக்குமாா்,நகா் செயலாளா் சி.சங்கா் ஆகியோா் நேரில் சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது..

காஞ்சிபுரம் நகரில் விளக்கடி கோயில் தெரு,கிருஷ்ணன் தெரு இணைப்பில் உள்ள பகுதிகளான ஒலிமுகம்மதுபேட்டை, வைகுண்டப் பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்படுவதை நிரந்தரமாக தீா்க்கவும், பாதாளச் சாக்கடைத் திட்டத்தை புதிய பகுதிகளுக்கும் விரிவுபடுத்திட வேண்டும்.ஓரிக்கை,அண்ணாநகா் ஆகிய பகுதிகளில் மழைநீா் தேங்கி பச்சை நிறமாகி கொசுக்கள் அதிகமாகி விட்டது. அப்பகுதியில் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும், நத்தப்பேட்டையில் புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும், ஓரிக்கை முதல் தேனம்பாக்கம் வரை உள்ள மிலிட்டரி சாலையில் தெருவிளக்கு கம்பங்கள் புதியன அமைத்து விளக்கு வெளிச்சம் ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் மனுவாக எழுதியும், நேரிலும் விளக்கியும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com