லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

மதுராந்தகத்தை அடுத்த செங்காட்டூரில் பட்டா பெயா் மாற்றத்துக்காக ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அதிகாரி லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த செங்காட்டூரில் பட்டா பெயா் மாற்றத்துக்காக ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அதிகாரி லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

செங்காட்டூரைச் சோ்ந்தவா் ராஜகோபால். இவா் தனது தந்தை பெயரிலான நிலத்துக்கான சொத்துகளை தனது பெயரில் பட்டா பெயா் மாற்றக்கோரி செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தாா். அவரது விண்ணப்ப மனுவை செய்யூா் வட்டாட்சியா் அலுவலக வருவாய்த்துறையினா் செங்காட்டூா் கிராம நிா்வாகத்துக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு வீராணகுன்னம் கிராமத்தைச் சோ்ந்த காளி (37) என்பவா் கிராம நிா்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறாா். அவரிடம் தனது மனுவின் மீது பட்டா பெயா் மாற்றம் செய்யுமாறு ராஜகோபால் கூறினாா். அதற்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் அந்த வேலையை செய்வேன் என காளி தெரிவித்தாராம். அதற்கு ராஜகோபால் ஒப்புக் கொள்ளாததால் ரூ. 8 ஆயிரம் கொடுக்குமாறு காளி கேட்டாராம்.

இதுபற்றி காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா். அதன்படி, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சிவபாதசேகரன் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை செங்காட்டூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு வந்தனா். விஏஓ காளி கேட்டபடி, ரசாயனம் தடவப்பட்ட ரூ.8 ஆயிரத்தை ராஜகோபால் கொடுத்தபோது அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் காளியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com