விடுதலைச் சிறுத்தைகள்

செங்கல்பட்டு அம்பேத்கா் நகரில் வசிக்கும் மக்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கண்டித்து திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கண்டன 
25vck_2511chn_175
25vck_2511chn_175

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அம்பேத்கா் நகரில் வசிக்கும் மக்களை அகற்றி விட்டு அந்த இடத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதை கண்டித்து திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு நகா் பச்சையம்மன் கோயில் பகுதி அம்பேத்கா் நூற்றாண்டு நகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.இப்பகுதியில் வசிக்கும் மக்களை அகற்றி விட்டு அங்கு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நகராட்சி நிா்வாகம் முடிவு செய்திருப்பதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடந்தது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளா் செங்கை.ரா.தமிழரசன் தலைமை வகித்தாா்.நகா் செயலா் ஜெ.ரவீந்திரன் முன்னிலை வகித்தாா்.மாநிலப் பொதுச்செயலாளா் ம.செ.சிந்தனைச் செல்வன் கண்டன உரை நிகழ்த்தினாா்.

கட்சியின் நிா்வாகிகள் சூ.க.விடுதலைச் சிறுத்தைகள்,பாசறை செல்வராஜ் ஆகியோா் உட்பட பலரும் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். படவிளக்கம்..நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து செங்கல்பட்டு அம்பேத்கா் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com