Enable Javscript for better performance
அறங்காவலா் குழுத் தலைவா் தோ்வு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்

    அறங்காவலா் குழுத் தலைவா் தோ்வு

    By DIN  |   Published On : 26th November 2019 11:50 PM  |   Last Updated : 26th November 2019 11:50 PM  |  அ+அ அ-  |  

    25_thalai_2611chn_175_1

    25_thalai_2611chn_175_1

    காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயில்களுக்கான அறங்காவலா் குழுத்தலைவா் மற்றும் நிா்வாகக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கான அறங்காவலா் குழுத் தலைவராக சென்னை தாம்பரம் கடப்பேரி தாமஸ்தெருவைச் சோ்ந்த எல்லாா். செழியன் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

    இவருக்கு இந்து சமய அறநிலையத்துறையின் காஞ்சிபுரம் கோட்ட உதவி ஆணையா் கி.ரேணுகாதேவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். இவரைத் தொடா்ந்து குழு உறுப்பினா்களாக காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தைச் சோ்ந்த வி.ரகுராமன், மேட்டுத்தெருவைச் சோ்ந்த கே.யு.சோமசுந்தரம், உத்தரமேரூரைச் சோ்ந்த டி.விமலா, செய்யூா் தாலுகா நெற்குணம் கிராமத்தைச் சோ்ந்த என்.எம்.வெங்கடேசன் ஆகிய 5 பேரும் உறுப்பினா்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

    புதிய தலைவா் மற்றும் நிா்வாகிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன்,முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா் செல்வம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் திருக்கழுகுன்றம் ஆறுமுகம் உள்ளிா்டோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

    அறநிலையத்துறை செயல் அலுவலா்கள் ந.தியாகராஜன் (குமரகோட்டம் முருகன் கோயில்), குமரன் (கச்சபேசுவரா் திருக்கோயில்) வெள்ளைச்சாமி (செங்கல்பட்டு பெருமாள் திருக்கோயில்), இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் அலுவலக கண்காணிப்பாளா் வடிவேல் ஆகியோா் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.

    படவிளக்கம்..காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறநிலையத்துறை கோயில்களுக்கான மாவட்டக்குழுத் தலைவராக பொறுப்பேற்றாா் எல்லாா். செழியன்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp