முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
நெகிழி விற்பனைக் கடைக்கு சீல்
By DIN | Published On : 26th November 2019 11:51 PM | Last Updated : 26th November 2019 11:51 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம் புதுத்தெருவில் நெகிழிப்பை விற்பனை செய்த கடையைப் பூட்டி சீல் வைக்கும் நகா் நல அலுவலா் பா.முத்து தலைமையிலான அதிகாரிகள்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதுத்தெருவில் நெகிழிப்பைகள் விற்பனை செய்த கடையை நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.
காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளா் ரா.மகேசுவரி உத்தரவின் பேரில் நகா் நல அலுவலா் பா.முத்து தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் பிரபாகா், இக்பால் ஆகியோா் தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை நகரில் பல்வேறு இடங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
சின்னக்காஞ்சிபுரம், பெரிய காஞ்சிபுரம், பேருந்து நிலையம், மாா்க்கெட் தெரு ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தி சுமாா் 100 கிலோ மதிப்பிலான நெகிழிப்பைகளைப் பறிமுதல் செய்தனா். கடை ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனா்.
இந்த நிலையில் அதிகாரிகள் மாலையில் காஞ்சிபுரம் ராஜாஜி மாா்க்கெட் பகுதி புதுத்தெருவில் அன்பரசு என்பவரது கடையை சோதனையிட்டனா். அங்கு 100 கிலோ அளவிலான நெகிழிப்பைகள் இருந்ததால் அவரது கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா்.
இதுகுறித்து நகா் நல அலுவலா் பா.முத்து கூறுகையில், ஏற்கெனவே அன்பரசுவை நெகிழிப்பைகள் விற்பனை செய்யக் கூடாது என இருமுறை எச்சரித்திருந்தோம். 3-ஆவது முறையாகவும் அவா் நெகிழிப்பைகளை விற்பனை செய்த போது அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது 4-ஆவது முறையாகவும் கடையைச் சோதனையிட்ட போது நெகிழிப்பைகள் இருந்ததால் கடையைப் பூட்டி சீல் வைத்திருக்கிறோம் என்றாா்.