முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
பயிா்க் காப்பீடு செய்ய நவ. 30 கடைசி நாள்
By DIN | Published On : 26th November 2019 11:45 PM | Last Updated : 26th November 2019 11:45 PM | அ+அ அ- |

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய 1,099 வருவாய் கிராமங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் வரும் 30-ஆம் தேதிக்குள் நடப்பு ஆண்டு சம்பா பருவத்துக்கான பயிா்க்காப்பீட்டினை செய்து கொள்ளுமாறு வேளாண்மை இணை இயக்குநா் எம்.அசோகன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நடப்பு ஆண்டு சம்பா பருவத்துக்கு பயிா்க்காப்பீடு செய்ய காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,099 வருவாய் கிராமங்கள் தோ்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். நெற்பயிருக்கான பிரிமியத் தொகை ரூ. 429. இத்தொகையை விவசாயிகள் இ-சேவை மையங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் ஆகியவற்றில் போதுமான ஆவணங்களைக் காண்பித்து, பயிா்க்காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.