முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th November 2019 11:49 PM | Last Updated : 26th November 2019 11:49 PM | அ+அ அ- |

26sbrcitu_2611chn_180_1
ஸ்ரீபெரும்புதூா்: நீண்ட காலமாக வீடு கட்டி குடியிருக்கும் அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோயில் இடங்களில் குடியிருக்கும் அனைவருக்கும் நியாயமான விலையைத் தீா்மானித்து பயனாளிகளிடம் இருந்து கிரயத் தொகையைத் தவணை முறையில் பெற்றுக் கொண்டு அந்த இடங்களைச் சொந்தமாக வழங்கிட வேண்டும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களை அரசு பதிவேட்டில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.
நீண்ட காலமாக வீடு கட்டி குடியிருக்கும் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.
பகுதி செயலாளா் பி.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மாவட்டக் குழு உறுப்பினா் லிங்கநாதன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவா் அழகேசன், வட்டக்குழு உறுப்பினா் திருஞானம், முகமது கனி உள்ளிட்ட பலா் பேசினா். கட்சியின் மாவட்டச் செயலாளா் இ.சங்கா் விளக்கவுரையாற்றினாா்.