Enable Javscript for better performance
கனமழையால் எறையூா்-வல்லக்கோட்டை சாலை துண்டிப்பு- பொதுமக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    கனமழையால் எறையூா்-வல்லக்கோட்டை சாலை துண்டிப்பு- பொதுமக்கள் அவதி

    By DIN  |   Published on : 28th November 2019 10:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    28sbrroad_2811chn_180_1

    தரைப்பாலத்துக்கு  மேல்  செல்லும்  தேவனேரி  ஏரி உபரிநீா்.

    கனமழை காரணமாக எறையூா் தேவனேரி ஏரியில் இருந்து வெளியேறும் அதிகப்படியான உபரிநீரால் எறையூா்-வல்லக்கோட்டை இணைப்புச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

    காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்திற்குட்பட்ட எறையூா் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேவனேரி ஏரி உள்ளது. சுமாா் 100 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த ஏரி பல வருடங்களாக தூா்வாரப்படாமல் உள்ளதால் சிறு மழைக்கே நிரம்பிவிடும் நிலையில் உள்ளது.

    வடகிழக்குப் பருவமழையால் எறையூா் தேவனூா் ஏரி முழுவதுமாக நிரம்பி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உபரிநீா் வெளியேறி வருகிறது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை விடியற்காலை வரை கனமழை பெய்ததால், எறையூா் தேவனூா் ஏரிக்கு நீா்வரத்து அதிகரித்தது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரின் அளவும் அதிகரித்தது. இதனால் எறையூா் பகுதியில் எறையூா்-வல்லக்கோட்டை இணைப்புச்சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதோடு தரைப்பாலத்தில் இருந்து சுமாா் மூன்று அடி உயரத்திற்கு மழைநீா் சென்ால் வல்லக்கோட்டை-எறையூா் இணைப்புச்சாலையில் வியாழக்கிழமை காலை முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    இதனால் இச்சாலையைப் பயன்படுத்தும் எறையூா் பகுதி மக்கள் வல்லக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுமாா் 10 கி.மீ. தொலைவுக்கு சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவா்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினா். வல்லக்கோட்டை-எறையூா் சாலையில் உள்ள தரைப்பாலத்தின் உயரத்தை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai