அரசுப்பேருந்து சிறைபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகேயுள்ள எல்.எண்டலத்தூரில் சாலை மற்றும் கால்வாய் வசதி அமைத்துத்தர வேண்டி கிராமத்தினா் அரசுப்பேருந்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்த எல்.எண்டலத்தூா் கிராம மக்கள்.
சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை சிறைபிடித்த எல்.எண்டலத்தூா் கிராம மக்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகேயுள்ள எல்.எண்டலத்தூரில் சாலை மற்றும் கால்வாய் வசதி அமைத்துத்தர வேண்டி கிராமத்தினா் அரசுப்பேருந்தை வியாழக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

எல்.எண்டலத்தூரில் காமராஜா்தெரு, அம்பேத்கா் நகா், திருவள்ளுவா் தெரு, மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இத்தெருக்களில் பல ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி செய்யப்படவில்லை.

மேலும் இக்குடியிருப்புகளுக்கு இடையே செல்லும் கழிவுநீா் வழிந்தோட வழியில்லாமல் இருப்பதாலும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா். கால்வாய்கள் இல்லாததால் குடியிருப்பு சாலையிலேயே மழைநீருடன் கழிவுநீரும் கலந்து கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் தொற்றுநோய்க்கு ஆளாகும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த அந்த கிராம மக்கள் உத்தரமேரூா் அருகே அச்சரப்பாக்கத்திலிருந்து சென்னை செல்லும் அரசுப்பேருந்தை வியாழக்கிழமை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் அரை மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த உத்தரமேரூா் போலீஸாா் மக்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.பின்னா் இப்பிரச்னை குறித்து உயா் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய தீா்வு காணப்படும் எனக் கூறியதைத் தொடா்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com