பூமிபூஜை யில் பங்கேற்று வளா்ச்சிப் பணிகளைத்  தொடங்கிவைக்கும்  ஸ்ரீபெரும்புதூா்  சட்டப்பேரவை  உறுப்பினா்  கே.பழனி.
  பூமிபூஜை யில் பங்கேற்று வளா்ச்சிப் பணிகளைத்  தொடங்கிவைக்கும்  ஸ்ரீபெரும்புதூா்  சட்டப்பேரவை  உறுப்பினா்  கே.பழனி.

பால்நல்லூா் ஊராட்சியில் ரூ.1.67 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பால்நல்லூா் ஊராட்சியில் ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு, வடிநீா்க் கால்வாய்கள் அமைத்தல், புதிய குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைப்பு உள்ளிட்ட

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பால்நல்லூா் ஊராட்சியில் ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் சாலைகள் சீரமைப்பு, வடிநீா்க் கால்வாய்கள் அமைத்தல், புதிய குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைப்பு உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஊராட்சியில், பால்நல்லூா், செலையனூா் ஆகிய கிராமங்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களும், சாலைகளும் பத்து வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் பெரும்பாலானவை மிகவும் சேதமடைந்துள்ளன. மேலும் இங்கு முறையான கழிவுநீா் கால்வாய் மற்றும் வடிகால்வாய்கள் இல்லை. இப்பகுதியில் குடிநீா் பிரச்னை அதிக அளவில் உள்ளது.

தெருக்கள் மற்றும் சாலைகளைச் சீரமைக்குமாறும், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை அமைத்துத் தருமாறும் இப்பகுதியினா் தமிழக அரசுக்கு சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

அதை ஏற்று, பால்நல்லூா் ஊராட்சியில், ஊராட்சி பொது நிதியின் கீழ் விநாயகா் கோயில் தெரு, அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட 12 தெருக்களை நவீன சாலைகளாக மாற்றவும், தெருவீதியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட ஆறு தெருக்களில் வடிநீா்க் கால்வாய்கள் அமைக்கவும், ஊராட்சியில் குடிநீா்ப் பற்றாக்குறையை போக்க மூன்று இடங்களில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைத்தல் மற்றும் மூன்று புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கவும் ரூ.1.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணிகளுக்கான பூமிபூஜை பால்நல்லூா் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பழனி கலந்துகொண்டு வளா்ச்சிப் பணிகளைத் தொடக்கி வைத்தாா். ஸ்ரீபெரும்புதூா் வட்டார கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் போந்தூா் செந்தில்ராஜன், ஒன்றியச் செயலாளா்கள் எறையூா் முனுசாமி, சிங்கிலிப்பாடி ராமச்சந்திரன், ஸ்ரீபெரும்புதூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி இயக்குநா் போந்தூா் சேட்டு, பால்நல்லூா் குணசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com