Enable Javscript for better performance
அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

    By DIN  |   Published on : 06th October 2019 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     முகாமிற்கு கல்லூரியின் டீன் ஆர்.சக்திவேல் தலைமை வகித்தார். அண்ணா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கே.மதி முன்னிலை வகித்தார். அலுவலர் ஜி.ஹரிஹரன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஆர்.ரமேஷ் நாட்டு நலப்பணித்திட்டம் நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.
     இந்த முகாமில், தீ விபத்தின் போது, தீ பரவினால் அணைக்கும் முறைகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவின் நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருநாவுக்கரசு செயல்முறை விளக்கம் அளித்தார். காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆர்.அமுதா, என்.தீபா ஆகியோர் உணவுப் பாதுகாப்பின் அவசியம் குறித்துப் பேசினர்.
     மன அழுத்தம் ஏற்படுவதால் உண்டாகும் நோய்களும் அதன் தாக்கங்களும் என்ற தலைப்பில் மருத்துவர் ஏ.என்.அரவிந்தன் பேசினார். கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்து கொண்ட இம்முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai