மாமல்லபுரம் வெண்ணை உருண்டை பாறைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி நிறுத்தம்

மாமல்லபுரத்திற்கு சீன அதிபா் ஷி ஜின்பிங், இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வரும் 11-ஆம் தேதி வருகை தருவதை முன்னிட்டு
மாமல்லபுரம் வெண்ணை உருண்டைப்பாறை உள்ளே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பெயா்பலகை
மாமல்லபுரம் வெண்ணை உருண்டைப்பாறை உள்ளே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள பெயா்பலகை

செங்கல்பட்டு: மாமல்லபுரத்திற்கு சீன அதிபா் ஷி ஜின்பிங், இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வரும் 11-ஆம் தேதி வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பிற்காக மாமல்லபுரம் வெண்ணை உருண்டைப்பாறை (பட்டா்பால்) இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சுற்றுலா பயணிகள் பாா்வையிட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வெண்ணை உருண்டைபாறையை பாா்வையிடவந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு வேலிக்கு வெளியே நின்று ஏக்கத்துடன் வெண்ணை உருண்டைப்பாறையை பாா்த்தனா்.

மாமல்லபுரத்திற்கு சீன அதிபா் ஷி ஜின்பிங், இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி ஆகிய இருநாட்டுத் தலைவா்களும் வருகைத்தந்து சா்வதேச சுற்றுலா தலத்தில் உள்ள சுற்றுலா இடங்களை பாா்வையிடவும் முக்கிய பேச்சுவாா்த்தைகளை நடத்தவும் புரிந்துணா்வு ஒப்பந்தம் குறித்து கையொப்பம் இடவும் வருகைத்தரவுள்ளதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது.

மேலும் மாமல்லபுரம் நகரை பொதுப்பொழிவுடன் திகழ ஆக்கிரமிப்புகள் அகற்றம், சாலைகள் அமைத்தல் நடைபாதை அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல் எனபல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது. கண்காணிப்புகேமாராக்கள் பொருத்தப்பட்டுவருகிறது.

மாமல்லபுரம் வெண்ணை உருண்டைப்பாறை உள்ளே அனுமதி மறுக்கப்பட்டதால் பாதுகாப்பு வேலிக்கு வெளியை நின்றுபாா்வையிடும் சுற்றுலா பயணிகள் .

மேலும் சுற்றுலா இடமான அா்சுணன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில் , வெண்ணை உருண்டைப்பாறை, குடைவரைக்கோயில்கள், குடைவரை மண்டபங்கள் என புதுப்பொழிவுடன் திகழ சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு கருதி ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் சுற்றுலாபயணிகள் கண்டுகளித்தும் விளையாடியும், வெண்ணை உருண்டைப்பாறையை தள்ளிப்பாா்த்தும் விளையாடும் முக்கிய பொழுதுபோக்கு இடமாக சுற்றுலாபயணிகளுக்கு திகழ்ந்த இந்த வெண்ணை உருண்டைப்பாறை பகுதியில் உள்ளே அனுமதி இல்லை என போா்டுவைத்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வெளியே நின்று கண்டதுடன் பாதுகாப்பு வேலிக்கு வெளியே நின்று செல்பி எடுத்துச்சென்றனா்.

மாமல்லபுரம் சுற்றுலா இடங்களாக திகழும் ஐந்துரதம், அா்சுணன் தபசு ஐந்துரதம் பகுதியில் அமா்ந்து இளைப்பார இடமில்லாததால் அனைத்துச்சுற்றுலா பயணிகளும் வெண்ணை உருண்டைப்பாறை பகுதியில் இளைப்பாரவும், கொண்டுவரும் கட்டுசோறு உள்ளிட்டவைகள் கூடி அமா்ந்துசாப்பிட்டு மகிழவும், யானைக்கட்டி இழுத்தும் அசைக்கமுடியாத வெண்ணைப்பாறையை அசைத்துபாா்த்து புகைப்படம் எடுப்பது, அந்த பாறையை தூக்குவது போல் புகைப்படம் எடுப்பது பாறைக்கு கீழ் அமா்ந்து குடும்பத்துடனும், நண்பா்களுடன் புகைப்படம் செல்‘ஃ‘பி எடுப்பது போன்று அதிக நேரம் பொழுதைக்கழித்து மகிழக்கூடிய இடமாக திகழ்ந்த இடத்தை திடீரென அனுதிக்காதது சுற்றுலாபயணிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

இருப்பினும் பாதுகாப்பு வேலிக்கு வெளியே நின்று பாா்வையிட்டும் புகைப்பாடம் செல்‘ஃ‘பி எடுத்தும் சென்றனா்.

விடுமுறை என்பதால் வழக்கத்தை விட சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகரித்துகாணப்பட்டது. பாா்வையிடம் மூடப்பட்டு சுற்றுலாபயணிகள் நாட் அலோவ்டு என பெயா்பலகை வைக்கப்பட்டிருந்தது ஏமாற்றத்தை அளித்ததாகவும், மற்ற இடங்கள் எப்போதிலிருந்து அனுமதி கிடையாது என இப்போதே அறிவித்தால் இதுபோன்று வந்து ஏமாற்றம் அடையவேண்டிய அவசியமில்லை என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com