முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
கல்பாக்கத்தில் துர்கா பூஜை
By DIN | Published On : 07th October 2019 04:06 AM | Last Updated : 07th October 2019 04:06 AM | அ+அ அ- |

கல்பாக்கம் அணுவாற்றல் மையக் குடியிருப்பில் வசிக்கும் மேற்கு வங்க மக்கள் ஞாயிற்றுக்கிழமை துர்கா பூஜை செய்து வழிபட்டனர்.
விழாவையொட்டி குழந்தைகளின் ரங்கோலி நடனமும், வங்காள இசைக்கலைஞர்களின் இசைநிகழ்ச்சியும் நடந்தது. கல்பாக்கம் அணுவாற்றல் குடியிருப்பில் வசிக்கும் மேற்கு வங்காள பெண்கள் பலர் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து விழாவில் கலந்துகொண்டு துர்கா தேவியை வழிபட்டனர். இந்த சிலை செவ்வாய்க்கிழமை அன்று பூஜிக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு சென்று கல்பாக்கம் கடலில் கரைக்கப்பட உள்ளது.