முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
செங்கல்பட்டில் களை கட்டிய பூஜைப் பொருள்கள் விற்பனை
By DIN | Published On : 07th October 2019 04:03 AM | Last Updated : 07th October 2019 04:04 AM | அ+அ அ- |

செங்கல்பட்டில் ஆயுதபூஜையையொட்டி பூஜைப்பொருள்களின் விற்பனை களை கட்டியது.
நவராத்திரி விழாவின் 9-ஆம் நாள் சரஸ்வதி பூஜை எனப்படும் ஆயுதபூஜையும், 10-ஆம் நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.
இந்த பூஜை கோயில்களில் மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரிகள், வீடுகள், வியாபார ஸ்தலங்கள், அரசு அலுவலங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் நடைபெறும். இப்படி அனைவராலும் கொண்டாடப்படும் ஆயுதபூஜைக்குத் தேவையான பூஜைப் பொருள்கள், திருஷ்டி கழிக்க பூசணிக்காய்கள், வாழைமரங்கள், அலங்காரப்பொருள்கள் விற்பனை ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது. விலை அதிகமாக இருந்தாலும் பூஜைக்கு வாங்கும் பொருள்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.