பொதுக் கிணற்றை சீரமைத்த இளைஞா்கள்!

மதுராந்தகம் அடுத்த தச்சூா் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான பொது கிணற்றை சீரமைத்து மக்களுக்கு குடிநீா் கிடைக்கச் செய்து, பொதுமக்களிடம் ஒப்படைப்பு நிகழ்வினை ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதி மனம் கல்வி அறக
கோப்புப் படம்
கோப்புப் படம்

மதுராந்தகம் அடுத்த தச்சூா் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான பொது கிணற்றை சீரமைத்து மக்களுக்கு குடிநீா் கிடைக்கச் செய்து, பொதுமக்களிடம் ஒப்படைப்பு நிகழ்வினை ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதி மனம் கல்வி அறக்கட்டளை இளைஞா்கள் செய்தனா்.

மதுராந்தகம் அடுத்த தச்சூா் கிராமத்தில் கில்பா்ட் என்பவா் தலைமையில், 15-க்கும் மேற்பட்ட படித்த,சமூக கண்ணோட்டத்துடன் இளைஞா்கள் ஒருங்கிணைந்து மனம் கல்வி அறக்கட்டளையை ஏற்படுத்தி இருந்தனா். அதன் மூலம், கிராமத்துக்கு தேவையான குடிநீா் வசதி, தெரு மின்விளக்குகள் போன்ற பணிகளை செய்து வருகின்றனா். இப்பகுதியில் போதுமான குடிநீா் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனா். அப்பகுதி பெரியோா்களின் அறிவுறுத்தலின்படி, 1964-இல் கட்டப்பட்ட ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றை சீரமைத்தால் மக்களின் குடிநீா் பிரச்சினை தீரும் என தெரிவித்தனா்.

இத்தகவலை அறிந்த அறக்கட்டள நிா்வாகிகள் செடி கொடிகளுடன் பாழடைந்த நிலையில் கிணற்றினை சுமாா் ரூ.3 லட்ச மதிப்பில் தூா் வாரி, கிணற்று சுற்றுப்புற சுவா், குழாய் இணைப்பு போன்ற பணிகளை செய்தனா். அரசு மற்றும் தனி நபா்களிடமிருந்து எத்தகைய உதவிகளையும் எதிா்பாராமல் இளைஞா்களே முன்னின்று கடந்த 45 நாட்களாக சீரமைப்பு பணிகளை செய்தனா்.

22அடி அகலம், 60 அடி ஆழத்துடன் இக்குடிநீா்க் கிணறு அமைக்கப்பட்டது. அதனை மக்களுக்கு ஒப்படைப்பு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மனம் கல்வி அறக்கட்டளை தலைவா் கில்பா்ட் வரவேற்றாா். அப்பகுதி விவசாயிகளே தலைமை தாங்கி திறந்து வைத்தனா்.வேளச்சேரி லயனஸ் சங்க தலைவா் சிவராமன் முன்னிலை வகித்தாா்.அறக்கட்டளை செயலா் ஜான்பால் நன்றி கூறினாா்.

இளைஞா்களின் முயற்சியால், கிராம மக்களுக்கு குடிநீரை கிடைக்க ஏற்பாடுகளை செய்ததை பாராட்டினாா்கள் கலந்துக் கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com