Enable Javscript for better performance
ஜெனரேட்டர் வாகனம் மீது கார் மோதி பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    ஜெனரேட்டர் வாகனம் மீது கார் மோதி பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 3 பேர் பலி

    By DIN  |   Published on : 09th October 2019 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sweth


    மாமல்லபுரம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் வாகனம் மீது கார் மோதியதில் பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 
    சென்னை புளியந்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மாறன் (21), கார் ஓட்டுநர். இவரது மனைவி சுவேதா (20). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது. இவர்கள் உறவினர் இந்துமதி அவரது 10 மாதக் குழந்தை பரத் உள்ளிட்ட 7 பேருடன் புளியந்தோப்பில் இருந்து மாமல்லபுரத்தை அடுத்த வெண்புருஷத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு திங்கள்கிழமை மாலை காரில் சென்றனர். 
    திருவிடந்தை கிழக்குக் கடற்கரைச் சாலை அருகே சென்றபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் வாகனம் மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்தனர்.
    தகவலறிந்த மாமல்லபுரம் போலீஸார் அங்கு சென்று பலத்த காயமடைந்தவர்களை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தமிழ்மாறன், சுவேத உயிரிழந்தனர். தீவிர சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குழந்தை பரத் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai