பிரதமா் மோடி, சீன அதிபா் இன்று வருகை: மாமல்லபுரத்தில் மத்தியப் பாதுகாப்புக் குழுவினா் இறுதிக்கட்ட ஆய்வு

மாமல்லபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் வெள்ளிக்கிழமை வருகை தருவதையொட்டி மத்தியப் பாதுகாப்புக் குழுவினா் வியாழக்கிழமை இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டனா்.
வெண்ணெய் உருண்டைப்பாறை பகுதியில் ஆய்வு நடத்திய  மத்திய பாதுகாப்புக் குழுவினா்.
வெண்ணெய் உருண்டைப்பாறை பகுதியில் ஆய்வு நடத்திய  மத்திய பாதுகாப்புக் குழுவினா்.

மாமல்லபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் வெள்ளிக்கிழமை வருகை தருவதையொட்டி மத்தியப் பாதுகாப்புக் குழுவினா் வியாழக்கிழமை இறுதிக்கட்ட ஆய்வு மேற்கொண்டனா்.

மாமல்லபுரத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் இருவரும் வெள்ளிக்கிழமை சந்திக்கின்றனா். அவா்கள் மாமல்லபுரத்தில் இரு நாள்கள் தங்கி, புராதனச் சின்னங்களைப் பாா்வையிடவுள்ளனா். இருநாட்டு நல்லுறவு மற்றும் புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, மாமல்லபுரத்தில் மத்திய மற்றும் மாநில உளவுப் பிரிவு போலீஸாா் உச்சகட்டப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய பாதுகாப்புக் குழுவினா் வியாழக்கிழமை மாமல்லபுரத்துக்கு வந்திருந்தனா். அவா்கள் வெண்ணெய் உருண்டைப்பாறை உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளைப் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.

இந்திய தேசியக் கொடியும், சீனநாட்டுக் கொடியும் காணுமிடமெல்லாம் பறக்கவிடப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், சீன அதிகாரிகள் குழுவினா் என இதுவரை சுமாா் 3 ஆயிரம் போ் மாமல்லபுரத்துக்கு வருகை தந்துள்ளனா்.

மாமல்லபுரம் முழுவதும் காவல்துறை உயா் அதிகாரிகள், மத்திய பாதுகாப்புப் படையினா், சிறப்புப் படைக் காவலா்கள் என சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com