ஸ்ரீபெரும்புதூர் அருகே வாகன உதிரி பாகங்கள் மறுசுழற்சி மையம் திறப்பு

ஒரகடத்தை அடுத்த பேரீஞ்சம்பாக்கம் பகுதியில் பழைய வாகன உதிரி பாகங்களை மறுசுழற்சி  செய்யும் மையம் திறக்கப்பட்டுள்ளது.  


ஒரகடத்தை அடுத்த பேரீஞ்சம்பாக்கம் பகுதியில் பழைய வாகன உதிரி பாகங்களை மறுசுழற்சி  செய்யும் மையம் திறக்கப்பட்டுள்ளது.  
இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முரளி கூறியது: காற்று மற்றும் நீர் மாசடவதை முற்றிலும் தடுக்கும் வகையில் விரைவில் இந்தியாவில் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களைத் தவிர்த்து, பேட்டரி அல்லது மின்சாரத்தால் இயங்கக்கூடிய வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 
அதன்படி கடந்த 15 வருடங்களுக்கு முந்தைய வாகனங்களைத் தடை செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு பழைய வாகனங்களைத் தடை செய்யும் பட்சத்தில் தடைசெய்யப்பட்ட வாகன உதிரி பாகங்களை மறுசுழற்சி செய்யும் உரிமையை தென்னிந்தியாவில் மத்திய அரசு எங்களுக்கு வழங்கியுள்ளது. 
மறு சுழற்சி செய்யப்படும் வாகனங்களுக்கு நாங்கள் சான்றிதழ் வழங்குவோம். இந்த சான்றிதழ்களை வைத்துக் கொண்டு வாகனங்களின் உரிமையாளர்கள் புதிய வாகனங்களை வாங்கும் போது குறிப்பிட்ட அளவிற்கு தள்ளுபடி கிடைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com