Enable Javscript for better performance
கார் மோதியதில் ஒருவர் பலி- Dinamani

சுடச்சுட

    


    சந்தவேலூர் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற நான்கு பேர் மீது அடையாளம் தெரியாத கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
    சுங்குவார்சத்திரத்தை அடுத்த நந்திமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கணேசன்(52), சேகர்(50), பொடவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருணாகரன்(48), பெருமாள்(48). இவர்கள் நான்கு பேரும் வியாழக்கிழமை இரவு சந்தவேலூர் பகுதியில் நடந்து சென்றனர். 
    அப்போது, சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது வேலூர் பகுதியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத கார் இவர்கள் மீது மோதிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. 
    இதில் பலத்த காயம் அடைந்த அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கருணாகரன் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். சுங்குவார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai