சீனாவைச் சேர்ந்த 4 பேரிடம் போலீஸார் விசாரணை

மாமல்லபுரத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் காரில் சுற்றித் திரிந்த சீன நாட்டினர் 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மாமல்லபுரத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் காரில் சுற்றித் திரிந்த சீன நாட்டினர் 4 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் வெள்ளிக்கிழமை மாமல்லபுரத்துக்கு வருகை புரிந்தனர். இதனால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் போலீஸார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில்  கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் தாஜ் ஓட்டல் அமைந்துள்ள குன்றுக்காடு பகுதியில் காவல் கண்காணிப்பாளர் கண்ணம்மா தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஜம்புலிங்கம் (29) ஓட்டி வந்த காரில் இருந்த 5 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையில் அவர்கள் பெங்களூரு கல்லூரியில் படித்து வரும் சீனாவைச் சேர்ந்த கர்மாட்டெ சுரிங் நிங்க்யால் (20), லாப்சன் ஓஸர் (21), டென்ஜிங் செராப் (20), தென்சிங் இன்குடுஃப் (22), ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பங்கஜ்யாதவ் (22) என்பது தெரியவந்தது.  
இவர்களில் கார் ஓட்டுநர் ஜம்புலிங்கம், பங்கஜ்யாதவ் ஆகிய இருவரைத்தவிர மற்ற 4 பேரும் சீன அதிபருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கத்தில் வந்ததாகத் தெரியவந்ததையடுத்து, அவர்கள் வைத்திருந்த துண்டுப் பிரசுரங்களைப் போலீஸார் கைப்பற்றினர். 
கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து 4 பேரிடமும் தீவிர விசாரணை  நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com