முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 24th October 2019 05:20 AM | Last Updated : 24th October 2019 05:20 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரத் தலைவர் முருகன் தலைமை வகித்தார்.செயலர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர்களை அவதூறாகப் பேசியும், அலுவலகப் பணிக்குப் பொருந்தாத வேலைகளை செய்யச் சொல்லி ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுத்தும் வருகின்ற திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெலங்கானா மாநிலத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தமைக்காக அம்மாநில அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள், ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.