முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
கரும்பு அபிவிருத்தியாளர்கள் பயிலரங்கம், கண்காட்சி: அமைச்சர்கள் பங்கேற்பு
By DIN | Published On : 24th October 2019 05:21 AM | Last Updated : 24th October 2019 05:21 AM | அ+அ அ- |

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியாளர்களுக்கான 2 நாள் பயிலரங்கம், கண்காட்சி சிங்கப்பெருமாள்கோயிலில் உள்ள தனியார் விடுதி அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு சர்க்கரைக் கழக நிர்வாக இயக்குநர் ரீட்டா ஹரிஷ் தக்கர் தலைமை வகித்தார்.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழக இயக்குநர் பக்ஷிராம் விளக்கவுரையாற்றினார். தமிழகத் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், கரும்பு வகைகள் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் நூலை வெளியிட்டார். வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வேளாண் உற்பத்தி ஆணையர் ககன் தீப்சிங் மற்றும் முதன்மைச் செயலர் (தொழில் துறை) நா.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சர்க்கரை ஆலைகள் மற்றும் கரும்பு ஆராய்ச்சியாளர்கள் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் 350-க்கும் மேற்பட்ட கரும்பு அபிவிருத்தியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்துகொண்டு, கரும்பு ஆராய்ச்சி குறித்து பல்வேறு தலைப்புகளில் உரையாற்றவுள்ளனர்.
முன்னதாக, கரும்பு சாகுபடியில் தற்போது உள்ள நவீன ரகங்கள், கரும்பு சாகுபடியில் இயந்திரமயமாக்கல், சொட்டு நீர்ப்பாசனமுறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பக் கருவிகள் அடங்கிய கண்காட்சி நடைபெற்றது.