முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்-புதுச்சேரிக்கு குளிா் சாதனப் பேருந்து இயக்கம்
By DIN | Published On : 24th October 2019 10:49 PM | Last Updated : 24th October 2019 10:49 PM | அ+அ அ- |

புதிய பேருந்தை கொடியசைத்துத் தொடக்கி வைத்த மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் குளிரூட்டப்பட்ட புதிய அரசுப் பேருந்தை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் வியாழக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் குளிரூட்டப்பட்ட அரசுப் பேருந்து இயக்கப்பட்டதையொட்டி அப்பேருந்தில் செல்லும் பயணிகள் உள்பட பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா் செல்வம், முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், அதிமுக நகரச் செயலா் ஸ்டாலின், எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் ஆா்.டி.சேகா், காஞ்சிபுரம் ஒன்றிய செயலா் தும்பவனம் ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.