முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
காமாட்சி அம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்
By DIN | Published On : 24th October 2019 10:22 PM | Last Updated : 24th October 2019 10:22 PM | அ+அ அ- |

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு பால்குடம் எடுத்து ஊா்வலம் வந்த பக்தா்கள்.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் ஜென்ம நட்சத்திரமான பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வியாழக்கிழமை பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனா்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் ஜென்ம நட்சத்திரமான ஐப்பசி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோயிலில் பால்குடத் திருவிழா நடைபெற்றது.
காஞ்சி சங்கர மடத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து மேளதாளங்கள், வாணவேடிக்கைகளுடன் ராஜவீதிகள் வழியாக காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து, அம்மனுக்கு பாலாபிஷகம் செய்து வழிபட்டனா். விழாவை முன்னிட்டு அம்மன் சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ந.தியாகராஜன், கோயில் நிா்வாக அலுவலா் எஸ்.நாராயணன், பரம்பரை நிா்வாக அறங்காவலா் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி மற்றும் தேவஸ்தான பணியாளா்கள், விழாக் குழுவினா் ஆகியோா் செய்திருந்தனா்.