முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
தொடர் மழையால் நிரம்பிய எறையூர் தேவனூர் ஏரி
By DIN | Published On : 24th October 2019 05:21 AM | Last Updated : 24th October 2019 05:21 AM | அ+அ அ- |

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 98 ஏரிகளில் எறையூர் தேவனேரி உள்ளிட்ட ஐந்து ஏரிகள் நிரம்பியதால் உபரிநீர் கடந்த சில தினங்களாக வெளியேறி வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 98 ஏரிகள் உள்ளன. இதில் ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், எடையார்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் நீரைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக குண்டுபெரும்பேடு, தத்தனூர், பண்ருட்டி கிராமம், மாத்தூர் மற்றும் எறையூர் தேவனூர் ஆகிய ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
இந்த ஏரிகளில் கடந்த சில தினங்களாக உபரிநீர் வெளியேறி வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் பெரிய ஏரிகளான எடையார்பாக்கம், நாவலூர், வெள்ளாரை மற்றும் அழகூர் ஏரிகளில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், உபரிநீர் செல்லும் கால்வாய்கள் ரூ.20 லட்சத்தில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் மார்க்கண்டன் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.