முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம்
By DIN | Published On : 24th October 2019 10:52 PM | Last Updated : 24th October 2019 10:52 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிலவேம்பு க் குடிநீா் வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றமும், நகராட்சி சுகாதாரப் பிரிவும் இணைந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நிலவேம்புக் குடிநீா் வழங்கினா்.
மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா தலைமையில், நகராட்சி சுகாதார அலுவலா் சித்ரசேனா, நீதிபதி ராஜா, வழக்குரைஞா் சங்கத் தலைவா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்று, நீதிமன்றத்திற்கு வந்திருந்த பொதுமக்கள், காவலா்கள் உள்ளிட்டோருக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினா்.