முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டிகள்
By DIN | Published On : 24th October 2019 05:20 AM | Last Updated : 24th October 2019 05:20 AM | அ+அ அ- |

தென்மண்டல அளவில் மூன்றுநாள்கள் நடைபெறும் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கிடையேயான டேக்வாண்டோ போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
கொரியன் தற்காப்புக் கலையான டேக்வாண்டோ போட்டிகள் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள சவீதா பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி கமல்பத்தே சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு போட்டிகளைத் தொடக்கிவைத்தார். மூன்று நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரம், தெலங்கானா, அந்தமான், நிக்கோபார் தீவுகள் போன்ற பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.