முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் முகாம்
By DIN | Published On : 24th October 2019 01:40 AM | Last Updated : 24th October 2019 01:40 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஒய்.டி.ஸ்ரீநாத் தலைமை வகித்தார். உத்தரமேரூர் தனி வட்டாட்சியர் ஞானவேல், மண்டல துணை வட்டாட்சியர் இந்துமதி, வட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், உத்தரமேரூர் வட்டாரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் உள்பட பலரும் கலந்து கொண்டு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, செயற்கை கை, கால் மற்றும் ஊன்று கோல்கள், காதொலிக் கருவிகள் ஆகியன வழங்கிடுமாறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மொத்தம் 41 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் கிருபாகரன் நன்றி கூறினார்.