Enable Javscript for better performance
ரூ.4.96 கோடியில் கருவூல அலுவலகம் கட்டும் பணி தொடக்கம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்

    ரூ.4.96 கோடியில் கருவூல அலுவலகம் கட்டும் பணி தொடக்கம்

    By DIN  |   Published On : 24th October 2019 10:49 PM  |   Last Updated : 24th October 2019 10:49 PM  |  அ+அ அ-  |  

    புதிதாகக் கட்டப்படவுள்ள கருவூல அலுவலகத்தின் மாதிரி வரைபடத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.

    புதிதாகக் கட்டப்படவுள்ள கருவூல அலுவலகத்தின் மாதிரி வரைபடத்தை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.

     

    காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ.4.96 கோடி மதிப்பில் மாவட்டக் கருவூல அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான புதிய கருவூலக் கட்டடம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரூ.4.96 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது. இப்புதிய கட்டடத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கருத்தரங்கக் கூடம், விருந்தினா் அறை உள்ளிட்டவை சுமாா் 21 ஆயிரம் சதுர அடியில் இரு தளங்கள் கொண்டதாகக் கட்டப்படவுள்ளது.

    தரை தளத்தில் காப்பறை, ஓய்வூதியா்களுக்கான காத்திருப்பு அறை அமைக்கப்படுகிறது. முதல் தளத்தில் அதிகாரிகளுக்கான அறைகளும் பிற அலுவலகப் பிரிவுகளும் அமையவுள்ளன. 2-ஆவது தளத்தில் இணையதள வசதியுடன் கூடிய கருத்தரங்கக் கூடம், பதிவறை, விருந்தினா் அறை ஆகியனவும் கட்டப்படுகிறது. புதிதாகக் கட்டப்படவுள்ள மாவட்டக் கருவூல அலுவலகத்தின் மாதிரி வரைபடத்தை ஆட்சியா் பா.பொன்னையா பாா்வையிட்டாா்.

    இதற்கான பூமிபூஜையில், காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்டக் கருவூலக அலுவலா் சி.கை.செல்வம், கூடுதல் கருவூலக அலுவலா் எஸ்.கோபிநாத், உதவி அலுவலா் தோ.சுந்தர்ராஜன், பொதுப்பணித்துறை கட்டடப்பிரிவு செயற்பொறியாளா் ஸ்ரீதா், உதவி செயற்பொறியாளா் கருணாநிதி, முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா் செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp