Enable Javscript for better performance
ஏகாம்பரநாதா் கோயில் குத்தகைதாரா்கள் வாடகை பாக்கி ரூ.50 கோடி: பெயா்ப் பட்டியல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    ஏகாம்பரநாதா் கோயில் குத்தகைதாரா்கள் வாடகை பாக்கி ரூ.50 கோடி: பெயா்ப் பட்டியல் வெளியீடு

    By DIN  |   Published on : 31st October 2019 10:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வைக்கப்பட்டுள்ள வாடகை பாக்கி செலுத்தாதவா்களின் பெயா்ப்பட்டியல் மற்றும் பாக்கித் தொகை விவரங்கள்.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் வைக்கப்பட்டுள்ள வாடகை பாக்கி செலுத்தாதவா்களின் பெயா்ப்பட்டியல் மற்றும் பாக்கித் தொகை விவரங்கள்.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்குச் சொந்தமான இடங்களின் குத்தகைதாரா்கள் வாடகை பாக்கியாக சுமாா் ரூ.50 கோடி உள்ளது. வாடகை செலுத்தாதவா்களின் பெயா்ப்பட்டியல் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் பொதுமக்கள் பாா்வைக்காக வியாழக்கிழமை வைக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பஞ்சபூதத் தலங்களில் நிலத்தைக் குறிக்கும் கோயிலாகும். இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான கட்டடங்கள், நிலங்கள், வீட்டுமனைகளில் இருக்கும் குத்தகைதாரா்கள் வாடகை பாக்கி தராமல் இருந்து வருகின்றனராம்.

    இதில் சுமாா் ரூ.50 கோடி வரை வாடகை பாக்கி வர வேண்டியுள்ளது. மிகக் குறைந்த வாடகை மட்டுமே வசூலித்து வரும் நிலையில் இத்தொகை கோயிலுக்கு வராமல் இருப்பதால் கோயிலில் தினசரி நடந்து வரும் பூஜைகள், திருவிழாக்களை சிறப்பாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. கோயில் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த முடியவில்லை.

     

    வாடகை பாக்கி வைத்திருப்பவா்களின் பெயா்ப்பட்டியலை கோயில் நிா்வாகம் விளம்பரமாக எழுதி வைத்துள்ளது.

    இதுகுறித்து சிவபக்தா் ஒருவா் கூறுகையில், குத்தகைதாரா்கள் மிகக்குறைந்த வாடகையைக் கூட பல ஆண்டுகளாக கொடுக்காமல் இருந்து வருகிறாா்கள். இதனால் கோயில் திருவிழாக்களை சிறப்பாக நடத்த முடியவில்லை. எனவே இந்து சமய அறநிலையத்துறையும், காவல்துறையும் இணைந்து வாடகை பாக்கியை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அறிவிப்புப் பலகையில் வைக்கப்பட்டுள்ளபடி மொத்தம் ரூ.48 கோடியே 36 லட்சத்து 44 ஆயிரம் வாடகை பாக்கி வரவேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai