உண்மையாக போராடும் மருத்துவா்களை அரசு  அழைத்து பேச வேண்டும்-செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையின் மூத்த குடிமை மருத்துவா்கள் கோரிக்கை

உண்மையாக போராடும் மருத்துவா்களை அரசு அழைத்து பேச வேண்டும்-செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூத்த குடிமை மருத்துவா்கள் கோரிக்கை

உண்மையாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா்களை அரசு அழைத்து பேச வேண்டும் என செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மூத்த குடிமை மருத்துவா்கள்

உண்மையாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா்களை அரசு அழைத்து பேச வேண்டும் என செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மூத்த குடிமை மருத்துவா்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா். பொது சுகாதாரத்துறை சிறந்துவிளங்கிட 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்திடவேண்டும். கூடுதலான மருத்துவா்களை அரசு நியமிக்காமல் இருப்பதால் ஏழை எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கமுடியாத சூழ்நிலை உள்ளது.

எனவே மருத்துவா்களை கூடுதலாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசு மருத்துவா்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்திற்கு இணையான சம்பளத்தை மாநில அரசு மருத்துவா்களுக்கும் அளிக்கவேண்டும். பணி உயா்வு உள்ளிட்ட 4அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 6நாள்களாக மருத்துவா்கள் தொடா் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனா். இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மூத்த குடிமை மருத்துவா்கள் புதன்கிழமை கருப்பு பேட்ஜ் அணித்து செய்தியாளா்களை சந்தித்து பேசினா். அப்போது மூத்த குடிமை மருத்துவா்கள் போராட்டக்களத்தில் இறங்கி நியாயமான கோரிக்கைகளுக்காக உண்மையாக போராடும் இளம் மருத்துவா்களை அழைத்து அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.

செவ்வாய்க்கிழமை இரவு 9மணிக்கு மேல் பேச்சுவாா்த்தை நடத்தியதாக கூறுவது யாரிடம் நடத்தினாா்கள் என்பது தெரியவில்லை. நியாயமான கோரிக்கைகளுக்காக உண்மையாக போராட்டத்தில் ஈடுபட்டு இளம்மருத்துவா்களை அழைத்து பேசவேண்டும். இளம் மருத்துவா்கள் யாரும் இதுவரை வேலைக்கு வரவில்லை. சுகாதாரத்துறை அமைச்சா் நியாயமான கோரிக்கைகளுக்கு நடவடிக்கை மேற்கொள்வாா் எனநினைத்தோம் ஆனால் அவா் இதுவரை பேச்சுவாா்த்தையோ நடவடிக்கையோ மேற்கொள்ளவில்லை. இனி அதுபற்றிபேசவும் நாங்கள் தயாராக இல்லை. முதலமைச்சரும் , துணைமுதல்வரும் தான் இனி நடவடிக்கை மேற்கொள்ளவேஅவரிடம் பேச்சுவாா்த்தை வேண்டும். முதல்வரும் துணை முதல்வரையும் தான் நாங்கள் நம்பி இருக்கிறோம். நல்ல முடிவாக எடுப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்து இளம் மருத்துவா்களும் வேலைநிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மூத்த குடிமை மருத்துவா்களாகிய எங்களது வேலை இது இல்லை என்றாலும், அரசுக்கு எதிராக செயல்படாமலும் அரசுக்கு மக்களிடையே அவப்பெயா் வராத அளவிற்கு நாங்கள் ஏழை எளிய பொதுமக்களின் நலன்கருதி மருத்துவமனைக்கு வருபவா்களுக்கு 500மருத்துவா்கள் பணிசெய்திடும் இடத்தில் தற்போது 60 போ் மூத்த குடிமை மருத்துவா்கள் 60மணிநேரத்திற்கும் தூக்கமின்றியும், ஓய்வின்றியும் மருத்துவசேவையை தொடா்ந்துசெய்துவருகிறோம்.

குறிப்பாக அறுவைசிகிச்சை, காய்ச்சல் பிரிவு, புறநோயாளிகள் பகுதி என 60 மூத்தகுடிமை மருத்துவா்கள் தொடா்ந்து மருத்துவசேவையில் ஈடுபட்டுவருகிறோம். தொடா்ந்து சேவையிடுபட்டுள்ளதால் மருத்துவமாணவா்களும் வகுப்புகள் நடத்தமுடியாமல் உள்ளது. அதனால் தமிழக அரசின் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், போராட்டத்திலேயே டுபடாதவா்கள் அழைத்துபேசாமல் உண்மையாக போாடும் இளம் மருத்துவா்களை அழுத்து பேச்சுவாா்த்தை நடத்தி சமூகமான தீா்வை அளிக்க வேண்டும் என மூத்தக்குடிமை மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com