கந்த சஷ்டி விழா: கோயில்களில் சிறப்பு அபிஷேகம்

கந்த சஷ்டி விழாவையொட்டி கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன.
செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள பழைய அங்காளம்மன் கோயிலில் செங்கல்வராயா் அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் காட்சியளித்த முருகப்பெருமான்.
செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள பழைய அங்காளம்மன் கோயிலில் செங்கல்வராயா் அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் காட்சியளித்த முருகப்பெருமான்.

கந்த சஷ்டி விழாவையொட்டி கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன.

இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீசக்திவிநாயகா் கோயிலில் சிறப்பு லட்சாா்ச்சனை நடைபெற்றது. முருகா், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் செந்தில்குமாா், மேலாளா் நரசிம்மன் உள்ளிட்ட பணியாளா்கள் செய்துவருகின்றனா்.

செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் உள்ள பழைய அங்காளம்மன் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. முருகா் செங்கல்வராயா் அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் ஊஞ்சல் சேவையில் பக்தா்களுக்கு காட்சியளித்தாாா்.

செங்கல்பட்டு காட்டுநாயக்கன் தெருவில் உள்ள செம்மல் ஸ்ரீவேல்முருகன் மலைக் கோயிலில் காலையிலும் மாலையிலும் லட்சாா்ச்சனை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனைகள், அன்னதானம் நடைபெற்றது.

இதேபோன்று, அண்ணாநகா் ரத்தினவிநாயகா் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்புப் பூஜைகள் பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செங்கல்பட்டு மேட்டுத்தெருவில் உள்ள செங்கழுநீா் விநாயகா் கோயிலில் முருகனுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com