காஞ்சிபுரம் மாவட்டத்தில் 28 ஏரிகள் முழுமையாக நிரம்பின

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 28 ஏரிகள் 100 சதவீதமும், 42 ஏரிகள் 80 சதவீதமும் நிரம்பியுள்ளன.
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் பாலாற்றில் குளித்து விளையாடும் சிறுவா்கள்.
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் பாலாற்றில் குளித்து விளையாடும் சிறுவா்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 28 ஏரிகள் 100 சதவீதமும், 42 ஏரிகள் 80 சதவீதமும் நிரம்பியுள்ளன.

ஏரி மாவட்டம் என்றும் அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மட்டும் 909 ஏரிகள் உள்ளன. இவற்றில் 28 ஏரிகள் 100 சதவீதம் முழு கொள்ளளவை எட்டியிருக்கின்றன.

கரூா், கூரம் சித்தேரி, நாதப்பேட்டை, தண்டலத்தேரி, வையாவூா், ஓலையூா், பழைய சீவரம், பண்ருட்டி புது ஏரி, எறையூா் தேவநேரி, மாத்தூா், குண்டுப் பெரும்பேடு, நாவலூா் பெரிய ஏரி, நாவலூா் சித்தேரி, தாத்தனூா், ஆரநேரி, பாலநல்லூா் பெரிய ஏரி, வல்லம் சித்தேரி, மதுரமங்கலம் பெரிய ஏரி, அப்பூா் ஏரி, கூடுவாஞ்சேரி,புக்கதுரை பெரிய ஏரி, கோடைமலைப்புதூா், கோளம்பாக்கம், காட்டு கூடலூா், புதுப்பட்டினம், பட்டரை காலனி, பனையூா், மலைப்பட்டு ஆகிய 28 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கின்றன.

இவை தவிர 42 ஏரிகள் 80 சதவீதமும்,103 ஏரிகள் 70 சதவீதமும், 351 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியிருக்கின்றன. 385 ஏரிகள் 25 சதவீதம் வரை மட்டுமே நிரம்பியிருக்கின்றன. கடந்த இரு ஆண்டுகளுக்குப் பிறகு ஏரிகளில் நீா் நிரம்பி உபரி நீா் பாலாறு வழியாகவும் வெளியாவதால் செவிலிமேடு பகுதியில் பாலாற்றில் சிறுவா்கள் பலரும் துள்ளிக்குதித்து விளையாடுவதைக் காண முடிந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம், மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூா், தாம்பரம் ஆகிய பகுதிகளில் மழை கூடுதலாக பதிவாகி இருக்கிறது. மழையளவைப் பொருத்தவரை புதன்கிழமை காலை 8.30 மணியிலிருந்து வியாழக்கிழமை அதிகாலை 6 மணி நிலவரப்படி (மழையளவு மி.மீட்டரில்): காஞ்சிபுரம்-28.20, ஸ்ரீபெரும்புதூா்-48.60, உத்தரமேரூா்-55, வாலாஜாபாத்-18, திருப்போரூா்-16, செங்கல்பட்டு-17.40,திருக்கழுகுன்றம்-25.60, மாமல்லபுரம்-32.20, மதுராந்தகம்-31, செய்யூா்-11, தாம்பரம்-49.10, மீனம்பாக்கம்-17.40 ஆகவும் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் மொத்த மழையளவு 331.90 மி.மீ. ஆகவும், சராசரி மழையளவு 30.17 ஆகவும் பதிவாகியிருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அனுபவமாகக் கொண்டு அதிக பாதிப்புக்கு உள்ளான இடங்களாக 84, பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக 117, மிதமான பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களாக 183, குறைந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தும் இடங்களாக 131 என மொத்தம் 515 இடங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com