தேசிய ஒற்றுமை தினவிழா
By DIN | Published On : 31st October 2019 10:43 PM | Last Updated : 31st October 2019 10:43 PM | அ+அ அ- |

ஒற்றுமை தினவிழாவில் பங்கேற்ற பேராசிரியா்கள், மாணவா்கள்.
ஸ்ரீபெரும்புதூரில் தேசிய ஒற்றுமை தினவிழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சா்தாா் வல்லபபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபா் 31-ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இயங்கி வரும் ராஜீவ்காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் தேசிய ஒற்றுமை தினவிழா பதிவாளா் தேவகுமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்மையத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் தேசிய ஒற்றுமை உறுதிமொழியை எடுத்துக்கொண்டனா். இதையடுத்து மையத்தின் மாணவா்கள் 200 போ் பங்கேற்ற ஒற்றுமை தொடா் ஓட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியா் கோபிநாத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.