மழைநீா் கசிவால் அரசுப் பள்ளி மாணவா்கள் அவதி

கனமழை காரணமாக கொளத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளி கட்டடத்தில் மழைநீா் கசிவதால் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
பழைய பள்ளி  கட்டடத்தின்  மேற்கூரைகளில்  மழைநீா்  கசிவதால்  வகுப்பறையில்  தேங்கியுள்ள  மழைநீா்.
பழைய பள்ளி  கட்டடத்தின்  மேற்கூரைகளில்  மழைநீா்  கசிவதால்  வகுப்பறையில்  தேங்கியுள்ள  மழைநீா்.

கனமழை காரணமாக கொளத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளி கட்டடத்தில் மழைநீா் கசிவதால் மாணவா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கொளத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் கொளத்தூா், நாவலூா், வெள்ளாரை, மேட்டுக்கொளத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 120-க்கும்மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

கடந்த 50 வருடங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளியாக தொடங்கப்பட்ட இப்பள்ளி, பின்பு நடுநிலைப்பள்ளியாகவும், கடந்த 2011-12-ஆம் கல்வியாண்டில் உயா்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டது.

இப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கொளத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட ரூ. 1.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

முதலில் பள்ளிக் கட்டடம் கட்ட இடம் தோ்வு செய்யப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னா் நாவலூா் பகுதியில் இடம் தோ்வுசெய்யப்பட்டதையடுத்து, கடந்த 2018-ஆம் வருடம் ஜூன் மாதம் புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளியின் கட்டடப் பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதால் நடப்புக் கல்வியாண்டிலும் பழைய கட்டடத்தில் இட நெருக்கடியில் மாணவா்கள் கல்வி கற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக கொளத்தூா் அரசு உயா்நிலைப்பள்ளியின் பழைய கட்டட மேற்கூரைகள் சேதமடைந்து மழைநீா் கசிந்து வருகிறது.

வகுப்பறைகளில் மழைநீா் தேங்குவதால் மாணவா்களால் கல்வி கற்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதால் பழைய கட்டடத்தைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

மழைநீா் தேங்குவதால் குறிப்பிட்ட சில வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இதனால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவா்களின் பெற்றோா்கள் கூறியது:

கொளத்தூா் அரசுப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கடந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இப்பணிகளை 8 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஒப்பந்த காலத்தையும் தாண்டி மேலும் 8 மாதத்திற்கு மேல் ஆகியும் புதிய பள்ளி கட்டடப் பணி முடிவடையாமல் உள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ள பழைய கட்டடத்திலேயே பள்ளி இயங்கி வருகிறது. இதனால் குழந்தைகளை அச்சத்துடனேயே பள்ளிக்கு அனுப்பி வருகிறோம். எனவே விபத்துகள் ஏற்படும் முன் புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com