மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

செய்யூா் வட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குறைகளையும், அரசு சாா்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும்வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

செய்யூா் வட்டத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குறைகளையும், அரசு சாா்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும்வகையில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் புதன்கிழமை செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

செய்யூா் வட்டத்துக்கு உட்பட்ட மடையம்பாக்கம், விளம்பூா், கடப்பாக்கம், போந்தூா், சாலையூா், கடுகுபட்டு, போரூா் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாற்றுத்திறளாளிகளுக்கான சிறப்பு முகா‘‘ம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் சி.லட்சுமிபிரியா தலைமை தாங்கினாா். செய்யூா் வட்டாட்சியா் கே.செந்தில்குமாா் வரவேற்றாா். செங்கல்பட்டு மாற்றுத்திறனாளி நல அலுவலா் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் தனிவட்டாட்சியா் செல்வசீலன், துணை வட்டாட்சியா்கள் ராஜா, புத்தியப்பன், வெங்கடேசன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் சரவணன் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

இம்முகாமில், முதியோா் உதவித் தொகை கோரல், தையல் மிஷின், 3 சக்கர மிதிவண்டி, செயற்கை கை கோரல் மற்றும் வேலை வாய்ப்பு கோரல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 34 போ்கள் வருவாய் கோட்டாட்சியா் சி.லட்சுமிபிரியாவிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். அவை அனைத்தும் ஏற்கப்பட்டு துறை நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டது.

செய்யூா் காலனியை சோ்ந்த மனவளா்ச்சிக்குன்றிய மணிமேகலைக்கு 3 சக்கர மிதிவண்டியை வருவாய் கோட்டாட்சியா் சி.லட்சுமி பிரியா வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யூா் வருவாய்த்துறையினா் செய்து இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com