விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நகரின் பல்வேறு இடங்களில் ரசாயனக் கலப்பில்லாத பல வண்ணத்தினால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சனிக்கிழமை விற்பனைக்கு வந்துள்ளன.
விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நகரின் பல்வேறு இடங்களில் ரசாயனக் கலப்பில்லாத பல வண்ணத்தினால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சனிக்கிழமை விற்பனைக்கு வந்துள்ளன.
 விநாயகர்சதுர்த்தி விழா திங்கள்கிழமை (செப்.2) கொண்டாடப்படவுள்ளது.
 விநாயகர் சதுர்த்தியன்று வீட்டில் வைத்து வழிபடும் வகையில் ரசாயனக் கலப்பில்லாத, காகிதக் கூழினால் செய்யப்பட்ட பல வண்ணங்களினாலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
 கண்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விநாயகர் சிலைகள் காந்தி சாலை, காமராஜர் சாலை ஆகிய இடங்களில் தெருவோரங்களில் விற்பனைக்கு ஏராளமாக வந்து குவிந்துள்ளன.
 பலரும் இதை ஆர்வமுடன் பார்த்து, விரும்பிய விநாயகரை அவரவர்களது வசதிக்குத் தக்கவாறு வாங்கிச் செல்கின்றனர்.
 பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் உள்ள இந்த விநாயகர் சிலைகள் ரூ.150 முதல் ரூ.1,800 வரை விற்பனைக்குக் கிடைக்கின்றன.
 விநாயகர் சிலைகளை குழந்தைகளும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
 செங்கல்பட்டில்
 செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெருமுனைகளில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபடுவதில் இந்து அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 செங்கல்பட்டு சார்-ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திங்கள்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் மாலை உற்சவர் வீதி புறப்பாடும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி, செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
 இதேபோன்று செங்கல்பட்டு என்ஜிஜிஓ நகர் வரசித்தி விநாயகர் கோயில், அண்ணா நகர் ரத்தின விநாயகர் கோயில் , மணிக்கூண்டு சித்தி விநாயகர் கோயில், மேட்டுத்தெரு செங்கழுநீர் விநாயகர் கோயில், செங்கல்பட்டு கோட்டை அகழி வாயில் நீதிவிநாயகர் கோயில், நத்தம் சுந்தரவிநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை அப்பகுதி மக்களும் விழாக்குழுவினரும் செய்து வருகின்றனர்.
 செங்கல்பட்டில் உள்ள 33 வார்டுகளிலும் பொது இடத்தில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகளில் இந்து முன்னணியினர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் சிவசேனா அமைப்புகளின் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com