சிறப்பு ஆசிரியர்களுக்குப் பாராட்டு

குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான சிறப்பு

குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் பள்ளி செல்லாக் குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா காஞ்சிபுரம் ஹேண்ட்-இன்-ஹேண்ட் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. 
இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்  மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி செல்லா, பள்ளி இடை நிற்றல், குழந்தைத் தொழிலாளர், கொத்தடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள், உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 
நிகழ்ச்சிக்கு ஹேண்ட்-இன்-ஹேண்ட்  நிறுவனத் துணைத்தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். பொது மேலாளர் லோகேஷ் குமார், கணபதி, பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பிரேம் ஆனந்த் வரவேற்றார். நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கல்பனா சங்கர் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு  பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்கினார்.  
கார்டியன் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் தாரூக், துணைப் பொதுமேலாளர் பிரதியுஷா, ரூப்குமார், ஜெனிடா, அமர்தியா , ஸ்ருதி பரத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
இதில், ஆசிரியர்களுக்கான ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை திட்ட மேலாளர்கள் லோகநாதன், சுந்தர்,  கருணாகரன், மோகனவேல், ஏழுமலை  உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
உண்டு உறைவிடப் பள்ளிகளின் முதன்மை மேலாளர்  வெங்கட்ராமன் நன்றி கூறினார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com