கிணற்றில் விழுந்த பசு மீட்பு

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் தெருவில் மழைநீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த உறை கிணற்றில் வியாழக்கிழமை பசு ஒன்று விழுந்ததை அப்பகுதி பொதுமக்கள் மீட்டனர்.
கிணற்றில் விழுந்த பசு மீட்பு


காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் தெருவில் மழைநீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த உறை கிணற்றில் வியாழக்கிழமை பசு ஒன்று விழுந்ததை அப்பகுதி பொதுமக்கள் மீட்டனர்.
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார்.இவர் அப்பகுதியில் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில் அதில் மழைநீர் சேகரிப்புக்காக 5 அடி அகலம் 12 அடி ஆழத்தில் உறைகிணறு ஒன்றையும் அமைத்து வந்தார்.
இந்நிலையில் அவ்வழியாக வந்த பசும ஒன்று திடீரென அந்த உறை கிணற்றுக்குள் விழுந்து விட்டது.இதைப் பார்த்ததும் அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தனர்.சுமார் 2 மணி நேரமாக போராடியும் அந்தப் பசுவை வெளியில் கொண்டு வர முடியவில்லை. 
பின்னர்  பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் உறைகிணற்றுக்கு அருகில் பள்ளம் தோண்டி சுமார் 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு பசு சிறு,சிறு காயங்களுடன் மீட்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு அப்பசுவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com