விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் வியாழக்கிழமை விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி கண்டன


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் வியாழக்கிழமை விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சிபுரம் காவலான்கேட் பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.நேரு தலைமை வகித்தார். தமிழ்நாடு நில உரிமைக் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் கவிஞர் தேவ.ருக்மாங்கதன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எஸ்.கெம்பு, ஏ.தாண்டவராயப்பிள்ளை, எம்.எட்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை விளக்கி பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி.அமுதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் ஜி.மோகனன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் தலைவர் ஏ.மூர்த்தி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டி.கோவிந்தன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் இ.லாரன்ஸ், மாவட்டப் பொருளாளர் ஜி.மாரி ஆகியோர் உள்பட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
எட்டுவழிச்சாலையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை  அமல்படுத்த வேண்டும், எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக கையகப்படுத்திய நிலங்களை மறு ஒப்படைப்பு செய்ய வேண்டும், எட்டு வழிச்சாலை அமைக்கக் கூடாது என்பதற்காக போராடிய மக்கள் இயக்கப் பிரதிநிதிகள் மீது போட்ட பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.மகாதேவன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com