Enable Javscript for better performance
ஊட்டச்சத்து மாத விழா: காய்கறி, பழவகை கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    ஊட்டச்சத்து மாத விழா: காய்கறி, பழவகை கண்காட்சி

    By DIN  |   Published on : 14th September 2019 04:46 AM  |   அ+அ அ-   |    |  


    மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, காய்கறிகள், பழவகைகள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின் சார்பாக கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட காய்கறி, பழவகைகள் கண்காட்சியை  பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் தொடக்கி வைத்தார். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மா.தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். 
    இக்கண்காட்சியில் சத்துள்ள காய்கறிகள், பல்வகை பழவகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 
    இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஹேமமாலினி, கிருஷ்ணவேணி, பரிமளா, பிரேமா மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
     பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு காய்கறியிலும் உள்ள சத்துகள் குறித்து இதில் எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலக அதிகாரிகள் செய்திருந்தனர். 

    kattana sevai