Enable Javscript for better performance
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணி

    By DIN  |   Published on : 14th September 2019 04:47 AM  |   அ+அ அ-   |    |  

    raly


    உத்தரமேரூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் இணைந்து டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணியை  வெள்ளிக்கிழமை நடத்தினர்.
    உத்தரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் பேரணியை கொடியைசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணியில் வட்டார சுகாதார அலுவலர் உமாதேவி, சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். 
    பேரணியில் பங்கேற்றோர் பேருந்து நிலையம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
    மழைநீர் தேங்கிடாத வண்ணம் சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வட்டார சுகாதார அலுவலர் உமாதேவி வழங்கினார். 
    பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் பேரூராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.
     

    kattana sevai