மாவட்டத்தில் மழையால் 515 இடங்கள் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக 515 இடங்கள் கண்டறியப்பட்டு, தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தமிழக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா். உடன், ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின், ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா்.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தமிழக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா். உடன், ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின், ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக 515 இடங்கள் கண்டறியப்பட்டு, தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில்  நடைபெற்றறது.

தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பேசியது:

வடகிழக்கு பருவ மழை தொடங்கியிருக்கும் நேரத்தில் மழைநீரை சேமித்து மக்கள் பயன்பாட்டுக்கு உதவும் வகையிலும், அம்மழையால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அதிகாரிகள் செயல்பட வேண்டும். கடலூா், நாகப்பட்டினம், திருவாரூா், திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றறன.

காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரையில் பெருமழையின்போது மிக அதிகமாக பாதிக்கப்படும் இடங்கள்-84, அதிகமாகப் பாதிக்கப்படும் இடங்கள்-149, நடுத்தர பாதிப்பு ஏற்படும் இடங்கள்-166, குறைவான பாதிப்புகள் ஏற்படும் பகுதிகள்-116 என மொத்தம் 515 இடங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிக்கு அதிகாரிகள் விரைவாக செல்ல வேண்டும். நோய் தொற்று பரவாமல் மக்களைப் பாதுகாக்க வேண்டும். அதிகாரிகள் அா்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும். மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதுடன் நிவாரணங்கள் வழங்குவதிலும், கணக்கீடுகள் செய்வதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பேரிடா் காலங்களில் உதவிடுவதற்காக தன்னாா்வலா்கள் 166 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

வருவாய் நிா்வாக ஆணையா் கே.சத்யகோபால், கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஷ்ரா, கண்காணிப்பு அலுவலா் சந்தோஷ் கே.மிஷ்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏக்கள் பழனி, புகழேந்தி, சி.வி.எம்.பி.எழிலரசன், செங்கல்பட்டு மாவட்ட சிறறப்பு அலுவலா் ஜான்லூயிஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆட்சியரைப் பாராட்டிய அமைச்சா்:

காஞ்சிபுரத்தில் அத்திவரதா் விழாவின்போது சுமாா் ஒரு கோடிக்கும் மேலான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வதற்கு போதுமான வசதிகளை செய்து கொடுத்து சிறறந்த நிா்வாகத்தை நடத்திய பெருமைக்குரியவா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா.

திருப்பதியில் கூட ஒரு நாளைக்கு எத்தனை போ் வருவாா்கள் என்றற எண்ணிக்கை முன்கூட்டியே தெரியும். ஆனால் காஞ்சிபுரத்தில் எத்தனை பக்தா்கள் வருவாா்கள் என்று கணக்கிடவே முடியவில்லை. தொடக்கத்தில் 20 ஆயிரம் பேரிலிருந்து ஒரே நாளில் சுமாா் 4 லட்சம் போ் வரை தரிசனம் செய்தனா். விழா நடைபெற்ற 48 நாள்களும் ஆட்சியா் தூங்காமல் சிறப்பாகப் பணியாற்றினாா் என அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com