கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசரநிலை ஒத்திகை ஆலோசனைக் கூட்டம்

கல்பாக்கம் இந்திய அணுமின்நிலையத்தில் அவசரகால தயார்  திட்டத்தின்படி வளாக வெளிப்புற அவசரநிலை ஒத்திகை வரும் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதையடுத்து அதற்கான ஆலோசனைக்கூட்டம்

கல்பாக்கம் இந்திய அணுமின்நிலையத்தில் அவசரகால தயார்  திட்டத்தின்படி வளாக வெளிப்புற அவசரநிலை ஒத்திகை வரும் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதையடுத்து அதற்கான ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
அணுசக்தித் துறையின் கல்பாக்கம் மையத்திலுள்ள சென்னை அணுமின்நிலையத்தில் உள்ள அணு ஆராய்ச்சிப் பிரிவுகளில் அவசரகால தயார்நிலை ஒத்திகைத் திட்டத்தின்கீழ்,  வளாக வெளிப்புற  அவசரநிலை ஒத்திகை இரண்டாண்டுளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதன் முந்தைய ஒத்திகை கடந்த 2017-ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 23-ஆம் தேதி நடைபெற்றது. இந்த முறை அவசரநிலை ஒத்திகை கட்டளை மற்றும் கட்டுப்பாடு என்ற பெயரில்  வரும் வெள்ளிக்கிழமை  (27-ஆம் தேதி) ஒத்திகை பயிற்சி நடத்தப்படவுள்ளது. 
அணுசக்தித் துறை மற்றும் மாவட்ட அலுவலர்களின் முடிவெடுக்கும் திறன் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதம் குறித்து  பரிசோதிப்பதே இந்த ஒத்திகையின் நோக்கமாகும்.
இந்த ஒத்திகையைப் பார்வையிட தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள், அணுசக்தி துறை நெருக்கடி மேலாண்மைக்குழு, அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்திய அணுமின் கழகத்தின் உயர் அதிகாரிகள் வருகை தர உள்ளனர். அவசரநிலை திட்டத்தின் தலைவரான  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பி.பொன்னையா  இந்த ஒத்திகையை முன்னின்று நடத்த உள்ளார். 
இந்த ஒத்திகை குறித்து சென்னை அணுமின்நிலைய இயக்குநர் எம். ஸ்ரீநிவாஸ் கூறுகையில், பொதுமக்களை பாதிக்காத வகையில் இந்த  அவசரநிலை ஒத்திகை நடைபெறும். வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்த ஒத்திகையில் அதன் தலைவர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டு நடத்துகிறார். 
இந்த ஒத்திகையின்போது, கல்பாக்கம் அணுமின்நிலையத்தின் பல்வேறுபிரிவுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகளும், மாவட்ட  நிர்வாகத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் இந்த அவசர நிலை ஒத்திகையை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com