ரயில் நிலையத்தை சுத்தம் செய்த மாணவர்கள்

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினம் வரும் அக். 2-ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் குருஷேத்ரா சி.பி.எஸ்.இ. பள்ளி
ரயில் நிலையத்தை சுத்தம் செய்த மாணவர்கள்

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினம் வரும் அக். 2-ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் குருஷேத்ரா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியில் வையாவூர் குருஷேத்ரா சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் 150 பேர், ஆசிரியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கே.சந்தோஷ்குமார், நிர்வாக அலுவலர் பி.ஆர்.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரயில் நிலைய அலுவலர் இளம்பரிதி வரவேற்றார். காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் மாணவ, மாணவியருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

பள்ளி முதல்வர் கே.சந்தோஷ்குமார் கூறுகையில், மாணவர்களுக்கு சமூகசேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். இதுகுறித்து போட்டிகள் நடத்தி, வெற்றியாளர்களுக்கு வரும் அக். 2-இல் பரிசுகளை வழங்கவுள்ளோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com