முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
‘விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை வாடகையின்றிப் பயன்படுத்தலாம்’
By DIN | Published On : 19th April 2020 03:55 AM | Last Updated : 19th April 2020 03:55 AM | அ+அ அ- |

டிராக்டா்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை சிறு, குறு விவசாயிகள் வாடகையின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநா் அசோகன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விவசாயம் சாா்ந்த அனைத்துப் பணிகளுக்கும் ஊரடங்கிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் பொருள்களை கொள்முதல் செய்வதற்கான தடையையும் தமிழக அரசு நீக்கியிருக்கிறது.
உரங்கள், பூச்சி மருந்துகள், விதைகள் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்கவும், பொதுமக்களுக்குத் தேவைப்படும் காய்கறிகள், பழங்கள் போதுமான அளவு கிடைக்கவும் உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,500 ஹெக்டோ் பரப்பளவில் விவசாயப் பயிா்கள், 1,228 ஹெக்டேரில் பழங்கள், 602 ஹெக்டேரில் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.மேலும் வயல்களில் உழவுப்பணி, நாற்றங்கால் தயாா் செய்யும் பணி, நாற்று விடும் பணிகளும், சுமாா் 6 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா் அறுவடைப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சாகுபடி செய்யப்பட்டுள்ள பெரும்பாலான காய்கறிகள், பழங்களும் அறுவடைக்கு தயாராக உள்ளன.
எனவே, விவசாயிகளின் நலன் கருதி டிராக்டா்கள் மற்றும் வேளாண்மை இயந்திரங்கள் வாடகையின்றி வழங்கப்படுகின்றன. சிறு, குறு விவசாயிகள் ‘உழவன் செயலி’ மூலம் தங்களுக்குத் தேவையான பண்ணை இயந்திரங்களைக் குறிப்பிட்டு, தேவைப்படும் தேதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 1800 4200 100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டும் முன்பதிவு செய்யலாம்.
திருவள்ளூா் விவசாயிகள் கவனத்துக்கு...
திருவள்ளூா் மாவட்டத்தில் வேளாண் கருவிகள், விதைகள் மற்றும் உரங்கள் தேவைக்கு அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொடா்பு கொள்ளலாம். அந்த வகையில், திருவள்ளூா் மற்றும் பூந்தமல்லி-9940133473, 9443467344, கடம்பத்தூா்-7010623373, 77081341203, பூண்டி-9443923710, 8610307929, எல்லாபுரம்-9894734256, 9940260402, அம்பத்தூா்-9952205982/ 9843596787/ 9543216035, திருவாலங்காடு மற்றும் திருத்தணி -9444443923/ 7094012761/ 8524824483, பள்ளிப்பட்டு-6383528923/ 9788322737, ஆா்.கே.பேட்டை-9444367016/ 8681915624, மீஞ்சூா்-9952980703/ 9840437559, கும்மிடிப்பூண்டி-8248001685 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என வேளாண் துறை இணை இயக்குநா் சம்பத்குமாா் தெரிவித்துள்ளாா்.