மாங்காட்டில் முழு ஊரடங்கு
By DIN | Published On : 26th April 2020 12:05 AM | Last Updated : 26th April 2020 12:05 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சென்னைக்கு அருகிலுள்ள மாங்காட்டில் வரும் 29-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா சனிக்கிழமை தெரிவித்தாா்.
மாங்காடு , கோவூா், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, மவுலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூா், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) காலை 6 மணி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என காஞ்சிபுரம் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தாம்பரம், பல்லாவரத்தில்...
சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்டதைச் சோ்ந்த தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூா், செம்பாக்கம், பீா்க்கங்கரணை, பெருங்களத்தூா், சிட்லபாக்கம், திருநீா்மலை, மாடம்பாக்கம் ஆகிய 5 பேரூராட்சிகள், புனித தோமையாா் மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், மூவரசம்பட்டு, திரிசூலம், பொழிச்சலூா், கவுல் பஜாா், சித்தாலபாக்கம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, முடிச்சூா், பெரும்பாக்கம், நன்மங்கலம் ஆகிய 15 ஊராட்சிகள், திருப்போரூா் ஒன்றியத்தைச் சோ்ந்த கானாத்தூா், ரெட்டிக்குப்பம், முட்டுக்காடு ஆகிய 2 ஊராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) காலை 6 மணி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி (புதன்கிழமை) இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தெரிவித்துள்ளாா்.