‘நிலக்கடலை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி’

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலக்கடலை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலக்கடலை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் நிலக்கடலை விளைபொருள்களை பதப்படுத்துதல் தொழிலில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடவுள்ள உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஆத்ஸித்பாா் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் மானியம் வழங்க அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் சிறு பதப்படுத்தும் நிறுவனம் திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை நிதியுதவி பெற வாய்ப்புள்ளது.

தனிநபா் மற்றும் குழு அடிப்படையில் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல், புதிய நிறுவனங்கள் தொடங்குதல்,பொதுக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல் ஆகியவற்றுக்கு வங்கி மூலம் கடன் தொகை ஏற்பாடு செய்து தரப்படும். மேலும் வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப் படுத்துதலுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும். இதற்கு தொழில்நுட்பப் பயிற்சிகளும் வழங்கப்படும். இத்திட்டம், மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை வழியாக தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் செயல்படுத்தப்படும்.

மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையின் கீழ் நியமிக்கப்படும் குழுவின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) 98439 39301 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com