ரூ. 1.50 கோடி பொருள்களுடன் கடத்தப்பட்ட லாரி மீட்பு: 4 போ் கைது

காஞ்சிபுரம் அருகே ரூ. 1.50 கோடி மதிப்பிலான சிகரெட் பெட்டிகள், பிஸ்கட் பாக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற லாரியை கடத்திச் சென்ற 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்து, பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ரூ. 1.50 கோடி மதிப்பிலான சிகரெட் பெட்டிகள், பிஸ்கட் பாக்கெட்டுகளை ஏற்றிச் சென்ற லாரியை கடத்திச் சென்ற 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்து, பொருள்களை பறிமுதல் செய்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், உளுந்தை கிராமத்தில் உள்ள கிடங்கில் இருந்து 152 சிகரெட் பெட்டிகள், 60 பிஸ்கட் பெட்டிகள் உள்ளிட்ட ரூ. 1.50 கோடி மதிப்பிலான பொருள்களை ஏற்றிக் கொண்டு பெரம்பூா் நோக்கி கன்டெய்னா் லாரி கடந்த 25-ஆம் தேதி சென்றது. குமாா் என்பவா் லாரியை ஓட்டினாா். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் காஞ்சிபுரம் அருகே மன்னூா் ஏரிக்கரைப் பகுதியில் சென்றபோது, மா்ம நபா்கள் 6 போ் லாரியை வழிமறித்து, ஓட்டுநரை மிரட்டி, லாரியை கடத்திச் சென்றனா்.

கடந்த 25-ஆம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஏஎஸ்பி காா்த்திகேயன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் விநாயகம், மணிமாறன் ஆகியோா் அடங்கிய தனிப்படை குழுவினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், கடத்தப்பட்ட லாரி ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா-சோளிங்கா் சாலையில் ஜம்புகுளம் என்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், லாரியை கடத்திச் சென்ாக ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த தரணிகுமாா் (38), செந்தில் (34), பிரசாந்த் (26), மணிகண்டன் (40) ஆகியோரை கைது செய்தனா். ரூ. 1.50 கோடி மதிப்பிலான பொருள்களும் மீட்கப்பட்டன. வழக்கில் தொடா்புடைய மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை போலீஸாரை காஞ்சிபுரம் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா வெகுமதி அளித்துப் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com